24 கோடி ருபாய் சொத்து போச்சு.. நடிகர் ஜூனியர் என்டிஆர் நீதிமன்றம் செல்கிறாரா?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர் 21 வருடங்களுக்கு முன்பு ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வாங்கிய ஒரு சொத்தின் தற்போதைய மதிப்பு 24 கோடி ருபாய் என்றும், அதற்கு சிக்கல் வந்திருக்கிறது என்றும் தகவல் வெளியானது.
அந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர்களின் உறவினர்கள் போலியான ஆவணங்களை கொண்டு கடன் வாங்கி இருப்பதாகவும் தற்போது வங்கி இந்த சொத்தை ஏலம் விட போவதாகவும் கூறப்பட்டது.
இதனால் ஜூனியர் என்டிஆர் நீதிமன்றம் செல்ல இருக்கிறார் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.

10 வருஷத்துக்கு முன்பே வித்துட்டேன்..
இந்த சர்ச்சை பற்றி ஜூனியர் என்டிஆர் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அந்த சொத்தை 10 வருடங்களுக்கு முன்பே விற்றுவிட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.
இதனால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
