தளபதி விஜய்யை இயக்குகிறாரா லவ் டுடே இயக்குனர் பிரதீப்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ்
லவ் டுடே
அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் லவ் டுடே. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருந்தார்.
முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் பல கோடிகளை குவித்து வருகிறது.

லவ் டுடே படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை எடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விஜய்யோடு படமா
நேற்று நடந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட விஜய்யுடன் பிரதீப் ரங்கநாதன் கைகோர்ப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த பிரதீப், விஜய் சாருக்கு கதை சொல்லிருக்கேன், ஆனால், இப்போ அதை பத்தி பேச கூடாது. விரைவில் அதை பற்றி கண்டிப்பாக பேசுவோம். என்று கூறியுள்ளார் பிரதீப். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..

சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )