மும்பையில் புது வீடு வாங்கினாரா சமந்தா? தலைசுற்ற வைக்கும் விலை
சமந்தா
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் படங்களின் பணிகளையும் இடையில் மேற்கொண்டார்.
சமந்தா தற்போது படிப்படியாக குணமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த ஒர்கவுட் வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
மும்பையில் புது வீடு?
சமந்தா ஏற்கனவே ஹைதராபாத்தில் தான் சொந்த வீடு வைத்திருக்கிறார். அவர் முன்னாள் கணவர் நாக சைதன்யா உடன் வாழ்ந்து வந்த வீட்டை தான் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்.
தற்போது சமந்தா மும்பையில் Citadel என்ற என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஹாலிவுட் புகழ் ரஸோ ப்ரதர்ஸ் தயாரித்து வரும் அந்த சீரியல் அமேசான் ப்ரைம் தளத்திற்காக உருவாகி வருகிறது.
இந்நிலையில் சமந்தா மும்பையில் சொந்தமாக ஒரு 3 BHK வீட்டை வாங்கிவிட்டாராம். அதன் விலை 15 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தா இனி ஹிந்தியிலும் அதிகம் நடிக்க திட்டமிட்டு இருப்பதால் தான் வீடு வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது.
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்.. நிச்சயதார்தம் முடிந்தது