வடிவேலு சந்திரமுகி 2 இயக்குனருடன் சண்டை போட்டாரா?
சந்திரமுகி 2
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் அந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். ஆனால் இரண்டு பாகங்களின் கதைக்கு எந்த சம்பந்தமும் இருக்காது, இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க புது கதை என கூறி இருக்கிறார் அவர்.
வடிவேலு - இயக்குனர் சண்டை?
காமெடியனாக நடிக்கும் வடிவேலு இந்த படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் பி.வாசு உடன் சண்டை போட்டதாக தகவல் முன்பு தீயாக பரவியது.
ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் தனது பகுதிகளை ஏற்கனவே நடித்து கொடுத்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தோல்வியில் முடிந்த திருமணம்.. அதற்காக அப்படி மாறிடுவேனா: முதல் முறையாக கூறிய சமந்தா

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
