கேம் ஜேஞ்சர் படத்தில் 200 கோடியை இழந்த தில் ராஜு.. அதிரடியாக எடுத்த முடிவு
200 கோடி நஷ்டம்
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. இவர் தயாரிப்பில் சமீபத்தில் கேம் சேஞ்சர் மற்றும் Sankranthiki Vasthunam ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.
இதில் கேம் சேஞ்சர் திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில் தயாரிப்பாளருக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை தில் ராஜு இழந்த நிலையில், இனி அவரால் வேறு எந்த படமும் தயாரிக்க முடியாது, அவ்வளவு தான் என பலரும் பேச துவங்கிவிட்டனர்.
அதிரடியாக எடுத்த முடிவு
ஆனால், Sankranthiki Vasthunam திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் ரூ. 150 கோடி லாபத்தை தில் ராஜுவிற்கு கொடுத்துள்ளது. மிகப்பெரிய நஷ்டத்திற்கு பின், அதிலிருந்து மீண்டு வரும் வகையில் லாபம் கிடைத்துள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேம் சேஞ்சர் படம் தன் காலை வாரிவிட்டது. ஆனால், லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Sankranthiki Vasthunam படம் மாபெரும் லாபத்தை கொடுத்துள்ளது என்பதால், இனி லோ பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர் தில் ராஜு எடுத்துள்ளாராம்.