அங்க இருக்கறவங்களுக்கு யாருக்குமே தகுதி இல்லை.. ஆவேசமாக பேசிய தினேஷ் பெற்றோர்கள்..
பிக் பாஸ்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைவதற்க்கு குறைந்த நாட்களே இருக்கும் நிலையில் தற்பொழுது, பிரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் வீட்டிற்க்குள் வந்து மகிழ்ச்சி அளித்துள்ளனர்.
தகுதி இல்லை
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தினேஷின் பெற்றோர்கள், "பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளே சென்று வந்த தினேஷ் பெற்றோர்கள், உள்ளே இருந்த எல்லோரையும் வாழ்த்தி வந்தோம், தினேஷ்-க்கு அட்வைஸ் குடுத்தோம் எனக்கு எப்படி மரியாதை கொடுப்பியோ அதே போல் விசித்ரா க்கு மரியாதை குடுக்கனும் என்று சொன்னேன்".
"தினேஷ்க்கு சீரியலை விட பிக்பாஸ் வீட்டிற்க்குள்ளே இருப்பது பெரிய அனுபவமாக இருக்கும். வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே சென்றவர்களில் தினேஷ் ஜெய்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்".
"அப்பொழுது இருந்தே, பொய் சொல்ல கூடாது பொய் சொல்லும் சந்தர்பத்தை உருவாக்க கூடாது என்பது தான் தினேஷ் உடைய பழக்கம். விசித்ரா மற்றும் விஷ்னு விற்க்கு தினேஷ் ஐ பிக்பாஸ் வீட்டிற்க்கு வருவதற்க்கு முன்பே நன்றாக தெரியும்".
"விசித்ரா தினேஷை வம்பு இழுப்பதற்க்காக மட்டுமே அவரின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசினார், அதனால் தினேஷ் கோவப்பட்டார். விசித்ரா பேசியதை எல்லாம் வைத்து பார்த்தால் தினேஷ் பேசியது ஒரு விஷயமே இல்லை" என்று பெற்றோர்கள் இருவரும் கூறிகிறார்கள்.
மேலும் அவர்கள் பேசுகையில், "பிக்பாஸ் வீட்டில் தினேஷ்க்கு தகுதி இல்லை என்றால், பிறகு அந்த வீட்டில் யாருக்கு தான் தகுதி இருக்கு? யாருக்குமே தகுதி இல்லை" என்றும் கூறியுள்ளனர்.