2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் அட்லீ மற்றும் ப்ரியா... அழகிய போட்டோவுடன் வெளிவந்த அறிவிப்பு
அட்லீ
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கவனிக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி மக்களின் கவனத்திற்கு வந்தார்.
அப்படத்தின் மூலமாகவே தளபதி விஜய் கண்ணில் பட அவரை வைத்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை கொடுத்தார். அடுத்து பாலிவுட் பக்கம் சென்றவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார், அப்படம் ரூ. 1000 கோடி கிளப்பில் இணைந்தது.
ஷாருக்கான் படத்திற்கு பிறகு அட்லீ யாருடன் இணைவார் என எதிர்ப்பார்க்க அல்லு அர்ஜுனுடன் இணைவதாக மாஸ் அறிவிப்பு வந்தது, பின் படம் குறித்து சரியான தகவல்கள் இல்லை.

குடும்பம்
அட்லீ கடந்த 2014ம் ஆண்டு ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2023ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்.
இந்த நிலையில் அட்லீ-ப்ரியா இருவரும் 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார்களாம். அழகிய புகைப்படங்களுடன் இந்த சந்தோஷ செய்தியை பகிர ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

