வெளிநாட்டில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் அட்லீ- கியூட் புகைப்படங்கள்
இயக்குனர் அட்லீ
இயக்குனர் அட்லீ, தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டவர். சொல்வதற்கு ஈஸியாக இருந்தாலும் அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு நிறைய உழைப்புகள் போட்டிருப்பார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி படத்தை முதன்முறையாக இயக்கினார்.
பின் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து இயக்கியவர் அப்படியே பாலிவுட் பக்கம் சென்றார்.
ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கினார், படம் சில தினங்களிலேயே ரூ. 1000 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
மகன் பிறந்தநாள்
இயக்குனர் அட்லீ, பிரியா என்ற நடிகையை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2023ம் வருடம் ஜனவரி மாதம் மகன் பிறந்தார், அவருக்கு மீர் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தனது மகனின் முதல் பிறந்தநாளை அட்லீ மற்றும் ப்ரியா வெளிநாட்டில் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அட்லீ தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவரது மகனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.