லியோ படத்தில் அந்த விஷயம் தான் எனக்கு பிடிக்கும்.. இயக்குனர் அட்லீ சொன்ன விஷயத்தை பாருங்க!!
அட்லீ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ராஜா ராணி படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதைத்தொடர்ந்து, ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் என்ற படத்தை இயக்கி பாலிவுட்டில் அறிமுகமானார் அட்லீ.
இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அட்லீ அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்டி
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய அட்லீ நடிகர் விஜய் கடைசியாக நடித்த லியோ படத்தை பாராட்டி பேசியுள்ளார்.
அது குறித்து அவர் கூறுகையில், 'லியோ படத்தில் காபி கடையில் வரும் அந்த சண்டைக்காட்சிதான் அட்லீக்கு மிகவும் பிடித்த ஒன்று எனவும். ஏனென்றால், அதில், ஒரு அப்பாவின் உணர்வை ஒரு அப்பாவாக தத்ரூபமாக வெளிப்படுத்தி நடித்திருப்பார் நடிகர் விஜய் எனவும் பாராட்டியுள்ளார்.
மேலும், விஜய்யின் ஆவேசமான அவதாரத்தை வழங்கிய லோகேஷ் கனகராஜையும் அட்லீ பாராட்டி பேசியுள்ளார். அட்லீ அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் சல்மான்கானை இணைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்னதாக அல்லு அர்ஜுனை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
