விரைவில் பையா 2 படத்தை தொடங்கப்போகும் இயக்குனர் லிங்குசாமி- கார்த்திக்கு பதில் இவரா?
பையா படம்
லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா.
தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக ஹீரோ கார்த்தி களமிறங்கும் கதையே இப்படம். காரிலேயே பயணம் செய்யும் நாயகன்-நாயகி இடையில் விறுவிறுப்பான காட்சிகள் என சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இந்த படத்தின் 2ம் பாகம் எப்போதும் வரும் என ரசிகர்கள் எப்போதோ கேள்வி எழுப்பிவிட்டனர், ஆனால் இயக்குனர் தரப்பில் சரியான தகவல் வந்ததில்லை.
புது தகவல்
இந்த நிலையில் பையா 2 படம் குறித்து ஒரு சூப்பரான செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க பையா 2 தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் முந்தைய படத்தின் தாக்கத்தில் உருவாகுமா அல்லது முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாகுமா என்பது தெரியவில்லை.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
