விஜய் கடுமையான உழைப்பாளி, ரொம்ப நல்ல மனுஷன்.. இயக்குநர் மிஷ்கின் பேட்டி
விஜய் - மிஷ்கின்
விஜய்யின் நடிப்பில் வெளிவந்த யூத் திரைப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் மிஷ்கின். பின் தனது முதல் படத்தையே விஜய்யை வைத்துதான் இயக்க மிஸ்கின் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து, 2023ம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குநர் மிஷ்கின் பேட்டி
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குநர் மிஷ்கினிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "நான் முழுவதும் சினிமாவில் பணியாற்றி வருகிறேன். அரசியலை பற்றி எதையும் முழுமையாக கூறியது இல்லை. சினிமாவில் இருக்கும் வரை விஜய்யை தம்பி என அன்பாக அழைப்பேன்.
தம்பி விஜய் இப்போது அரசியல் கட்சி தலைவராகிவிட்டார். அதனால் எனக்கும், அவருக்கும் உள்ள உறவே வித்தியாசமாக உள்ளது. ஆகையால் அரசியல் கருத்து எதுவும் சொல்லமாட்டேன். என்னை பொறுத்தவரை விஜய் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுஷன். இதுதான் எனக்கு தெரியும். அரசியலாக இதை முலாம் பூசவேண்டாம்" என அவர் கேட்டுக்கொண்டார்.