இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு- எத்தனை கோடி?
பா. ரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றவர் அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய மெட்ராஸ் மாஸ் ஹிட், அவரது இயக்குனர் அந்தஸ்தை உயர்த்தியது.
அப்படம் அவருக்கு எந்த அளவு வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை வரை கொண்டு சென்றுள்ளது.
ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார். பா.இரஞ்சித் படங்களில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தனமாக பேசி இருப்பார்.
இப்போது இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2ம் பாகம், விக்ரமின் தங்கலான் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
சொத்து மதிப்பு
இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு ரூ. 43 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர் சில படங்களை தயாரித்தும் வருகிறார்.