விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் !
விஜய் வைராக்கியம் மிகுந்தவர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அதன்படி பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அவரின் 66-வது திரைப்படத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் குறித்து யார் என பேசினாலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்படும். அப்படி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சொன்ன விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
ஆம், அவர் சமீபத்தில் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் "விஜய் மிகவும் வைராக்கியம் மிகுந்தவர், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை முடிக்காமல் விடமாட்டார்.
2 முறை அவரை இயக்கும் சந்தர்ப்பம் கைநழுவியது. எதிர்காலத்தில் அவரை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்" என பேசியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
முதல்முறையாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் ! AK 62 படத்தின் அப்டேட்..