2 மாதமாக ஏதோ சரியில்லை, திடீரென நடந்த சம்பவம்- எமோஷ்னலாக பேசிய விஜய்யின் தந்தை, என்ன நடந்தது?
விஜய்யின் தந்தை
எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் நடிகர் விஜய்யின் அப்பா என்ற பெரிய அடையாளத்தோடு இருப்பவர் தான் இவர்.
சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தான் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் தன்னுடைய மகன் விஜய்யை அறிமுகம் செய்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திடீரென ஆபரேஷன்
நான் எப்போதும் மிகவும் ஆக்டீவாக இருக்க கூடிய ஒரு நபர். ஆனால் கடந்த 2, 3 மாதங்களாகவே எனக்கு ஒரு மாதிரி ஆகவே ரொம்ப எனர்ஜி குறைவா இருந்த மாதிரி இருந்தது.
மருத்துவரிடம் சென்றபோது ஸ்கேன் எடுக்க சொன்னார், எனக்கு பிரச்சனை இருப்பதையும் கண்டுபிடித்து உடனே சர்ஜரி செய்ய வேண்டும் என்றார், அண்மையில் சர்ஜரியும் முடிந்தது.
இந்த விஷயத்தை நான் எதற்கு கூறுகிறேன் என்றால், வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும், எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏதாவது பிரச்சனை வந்தால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
