ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் ஷங்கரின் அடுத்த கனவுப்படம்- இவர்கள் நடிக்கிறார்களா?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கிறார் ஷங்கர். அடைமொழிக்கு ஏற்றவாரு அவரது படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்க்கும் அளவிற்கு இருக்கும்.
கடைசியாக ஷங்கர் இந்தியன் 2 இயக்குவதாக அறிவிக்க பின் அப்படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க அப்படியே நின்றது. அதற்குள் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் ஒரு படம், பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என கமிட்டாகி அப்பட வேலைகளில் இருக்கிறார்.
தற்போது ஷங்கர் ராம் சரணுடன் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் தான் பிஸியாக இருக்கிறார்.
ஷங்கரின் புதிய படம்
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம், படத்தின் பட்ஜெட்டும் பெரிய அளவில் இருக்கும். இப்போது ஷங்கர் தனது கனவுப் படமான நீருக்கடியில் அறிவியல் கலந்து ஒரு கதைக்களத்தை கொண்ட படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.
ரூ. 1000 கோடி பட்ஜெட் கொண்ட இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri
