ப்ரெண்ட்ஸ் பட இயக்குனர் மருத்துவமனையில் கவலைக்கிடம்! ரசிகர்கள் அதிர்ச்சி
மலையாள சினிமாவில் பல ஹிட் படங்கள் இயக்கியவர் சித்திக். அவர் தமிழிலும் சில படங்கள் இயக்கி இருக்கிறார். விஜய் நடித்த பிரென்ட்ஸ் மற்றும் காவலன் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தையும் அவர் இயக்கி இருக்கிறார்.
கடைசியாக சித்திக் தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் அரவிந்த் சாமி, அமலா பால் ஆகியோர் நடித்து இருந்தனர்.

கவலைக்கிடம்
இந்நிலையில் இயக்குனர் சித்திக் நிமோனியா மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அவருக்கு தற்போது ECMO கருவி மூலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

அச்சு அசலாக இறந்த நடிகர் சுஷாந்த் சிங் போல இருக்கும் நபர்! வைரல் ஆகும் வீடியோ