அச்சு அசலாக இறந்த நடிகர் சுஷாந்த் சிங் போல இருக்கும் நபர்! வைரல் ஆகும் வீடியோ
சுஷாந்த் சிங்
நடிகர் சுஷாந்த் சிங் ஹிந்தி சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்து தனது நடிப்பு திறமையால் எல்லோரையும் ஈர்த்தவர். அவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலம் ஆனார்.
ஆனால் கடந்த 2020 ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது தற்கொலைக்கு காரணம் என கூறி வாரிசு நடிகர்கள் பலரும் ட்ரோல்களை சந்தித்தனர்.
அப்போது தொடங்கிய boycott bollywood என்ற விஷயம் தற்போது வரை ஹிந்தி சினிமாவை அலறவிட்டுக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட பல படங்கள் தோல்வியை தழுவின. கடைசியாக ஷாருக் நடித்த ஜவான் படம் தான் 1000 கோடி வசூல் செய்து விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
சுஷாந்த் போலவே இருக்கும் நபர்
சுஷாந்த் சிங் மரணம் பற்றி தற்போதும் ரசிகர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதை பார்த்து ரசிகர்கள் அதிகம் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். வீடியோவை நீங்களே பாருங்க.
இருப்பினும் இது AI மூலமாக போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என நெட்டிசன்கள் அந்த நபரை விளாசி வருகின்றனர்.
கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை?