திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் சிவாவின் தம்பி பாலா- மருத்துவமனையில் இருந்த வந்த போட்டோ
இயக்குனர் சிவா
தமிழ் சினிமாவில் சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் போன்ற படங்கள் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வரும் ஒரு இயக்குனர்.
தொடர்ந்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கிய அவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தையும் இயக்கி வெற்றிகண்டார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் பணியாற்றியுள்ள சிவா ஒளிப்பதிவாளராகவும், பாடலாசிரியர், கதையாசிரியராகவும் தனது திறமையை காட்டியுள்ளார்.
இப்போது சிவா நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்கி வருகிறார்.

மருத்துவமனையில் தம்பி
இயக்குனர் சிவாவின் சகோதரர் பெயர் பாலா, இவர் வீரம் படத்தில் அஜித்துடன் நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்திலும் சில படங்கள் நடித்துள்ளார், அண்மையில் தான் இவருக்கு மறுமணமும் நடந்தது.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாவை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதனால் தற்போது பாலாவிற்கு மருத்துவமனையில் ஆபரேசன் நடந்து வருகிறதாம். தனது தம்பியை பார்க்க இயக்குனர் சிவா மருத்துவமனை சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
Director #Siva at Kochi visiting Bala.
— ForumKeralam (@Forumkeralam2) March 7, 2023
Awaiting an official medical bulletin on the actor's situation.
Prayers for a speedy recovery ? pic.twitter.com/EV7lhP1f9P
நடிகர் வினீத்தின் அழகிய இளம் மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் வைரல் போட்டோ