சுதா கொங்கரா வாங்கிய சொகுசு கார்! விலை எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Dec 19, 2022 02:50 PM GMT
Report

தமிழ் நாட்டின் வெற்றி பட இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் 2010 -ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். இறுதிச்சுற்று படம் தான் அவரை பெரிய அளவில் பிரபலமாக்கியது.

அதன் பின் Air Deccan Founder மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியான ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப் பட்ட சூரரை போற்று எனும் படத்தை இயக்கினார்.இதில் சூர்யா நடித்திருந்தார்.இப்படத்திற்காக 5 தேசிய விருதுகள் கிடைத்தது.

சுதா கொங்கரா வாங்கிய சொகுசு கார்! விலை எவ்ளோ தெரியுமா? | Director Sudha Kongara Brought New Car

சில வாரங்களுக்கு முன்பு சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் பயோபிக் எடுக்க போகிறார் என தகவல்கள் இணையத்தில் பரவியது. இதற்கு சுதா "ரத்தன் டாடாவை எனக்கு பிடிக்கும் அனால் நான் அவரின் பயோபிக் எடுக்கவில்லை என ட்வீட்" செய்தார்.

புது சொகுசு கார் - விலை இவ்ளோவா

தற்போது சுதா கொங்கரா புதிய ஆடி காரை வாங்கியுள்ளார். மேலும் இந்த சந்தோஷமான விஷயத்தை சூர்யா, ஜிவி பிரகாஷ், மணிரத்னம், ராஜசேகர் பாண்டியன் பிரபலங்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் வாங்கிய Audi e- tron காரின் விலை சுமார் ரூ 1.25 கோடி என தெரியவந்துள்ளது. காற்றை மாசுபடுத்தாத கார் வாங்கியது மகிழ்ச்சி என அவர் கூறி இருக்கிறார்.

வனிதாவின் உறவினரா இந்த நடிகை? அவருக்கே 40 வருடம் கழித்து தெரியவந்த உண்மை

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US