எடிட்டருக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை! வலியுறுத்திய இயக்குநர் வெற்றிமாரன்.. சினியுலகம் டிரைக்டர்ஸ் ரவுண்ட்டேபில் 2023..
ரவுண்ட் டேபிள் பேட்டி
கடந்த சில வருடங்களாக ரவுண்ட் டேபிள் பேட்டி கலாச்சாரம் நடந்து வருகிறது. இதில் இந்த வருடம் நம் சினிஉலகம் யூடியூப் சேனலில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களான வெற்றிமாறன், அமீர், மோகன் ராஜா, நித்திலன், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்ட ரவுண்ட் டேபிள் பேட்டி வெளிவந்துள்ளது.
இந்த பேட்டியில் 2023ல் வெளியான திரைபடங்களைப் பற்றி பேசினார்கள். அடுத்து பழைய படங்களை ஒப்பிட்டு அதற்கு கிடைத்த வசூல், தற்போது வெளிவந்த டாடா,சித்தா போன்ற நல்ல படங்ளுக்கு கிடைக்கவில்லை என்று இயக்குநர் அமீர் தனது கருத்தை முன் வைத்தார்.
மேலும், மக்களுக்கு எது தேவையோ அதை திரைப்படமாக எடுத்தால் காலம் தாண்டியும் பேசப்படும் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறினார். பிறகு, இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான் தான் அசிஸ்டன்டா சேர்ந்தேன், அவர் என்ன அழைத்து அசிஸ்டன்டா சேர்த்துக் கொள்ளவில்லை.
அது போல கலை என்னைத் தேர்ந்தெடுக்க்காது நான் தான் கலையை தேர்ந்தெடுத்தேன். அதன்பின் அதற்காக கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என இயக்குநர் வெற்றி மாறன் கூறினார்.
அரசியலை பற்றி பேசுகையில்,அமீர் பழைய படங்களை ஒப்பிட்டு அப்பொழுது படங்களில் பேசப்பட்ட அரசியல் இப்பொழுது பேச முடிவதில்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் சென்சார் போர்டு பற்றியும் பேசப்பட்டது.
எடிட்டர்ஸ் ரவுண்ட் டேபிள்
பல சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், இதில் முக்கிய கருத்தாக எடிட்டர்ஸ்க்கு முக்கியதுவம் இல்லை என்றும் அவர்களும் வெளி உலகில் பெரிதாக பேசப்பட வேண்டும் என்று வெற்றிமாறன் உட்பட அனைவரும் கூறினார்கள். மேலும், நீங்கள் நான்கு எடிடர்ஸை அழைத்து வந்து அவர்களை வைத்து இதை போல் ரவுண்ட் டேபிள் நடத்தலாம் என்றும் இந்த பேட்டியில் வலியுருத்தினார்கள்.
இந்த பேட்டியில் உள்ள அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் இதை முழுமையாக பாருங்க..