விஜய் படங்கள் வைத்து லாபம் பார்த்தவர்கள் இப்படி பேசக் கூடாது- நடிகருக்கு ஆதரவாக பிரபலம்
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர் விஜய். ரஜினியை அடுத்து பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்தது விஜய்யின் படங்கள், அப்போதெல்லாம் அவர் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார்.
ஆனால் இன்று விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை, காரணம் கதைக்களம் சரியாக அமையவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
விஜய் எப்போதும் போல அவரது பணியை சரியாக செய்துள்ளார் என்பதே ரசிகர்களின் பேச்சு.
குறைந்த வசூல்
பீஸ்ட் படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் வர நிறைய விஷயங்கள் அதிகம் கலாய்க்கப்பட்டன. இதனால் தளபதி ரசிகர்கள் கடும் வருத்தத்தில் தான் உள்ளார்கள்.
எங்கு பார்த்தாலும் பீஸ்ட் படத்தின் வசூலுக்கு செம அடி, யஷ் நடித்த Kgf 2 எல்லா இடங்களிலும் மாஸாக ஓடுகிறது.
விஜய்க்கு ஆதரவாக விநியோகஸ்தர்
பீஸ்ட் படம் படு தோல்வி அடைவதால் நிறைய பேர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜமன்னார் என்ற விநியோகஸ்தர், சில படங்களில் குறைகளை இருக்கத்தான் செய்யும் அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம்.
ஆனால் அந்த நடிகர் ( @actorvijay ) படம் மூலமும் லாபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவர்களையே ஏளனம் செய்வது மிகவும் தவறான செயல், நன்றி மறப்பது நன்றன்று என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.