எதிரியாக மாறிய கணவன்.. நடிகை திவ்யா ஸ்ரீதர் கைக்குழந்தையுடன் உருக்கமான பதிவு
திவ்யா ஸ்ரீதர்
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இருந்தே அவரது கணவர் நடிகர் அர்ணவ் உடன் பிரச்சனை இருந்து வருகிறது. திவ்யாவை அர்ணவ் தாக்கியதாக சர்ச்சை வந்த நிலையில் அவரது புகார்ன் அடிப்படையில் போலீசார் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.
அதன்பிறகு திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகும் இரண்டு பேருக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

உருக்கமான பதிவு
இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் ஷுட்டிங் செல்லும் போது கைக்குழந்தை உடன் தான் செல்கிறார். ஆதரவுக்கு யாரும் இல்லை என்பதால் அவரே ஷூட்டிங் கூட்டி சென்று மகளை பார்த்துக் கொள்கிறார்.
தற்போது மகள் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு ”எது நடந்தாலும் மகளுக்காக அம்மா நான் இருப்பேன்” என பதிவிட்டு இருக்கிறார்.
கணவனே தற்போது எதிரியாக மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை திவ்யா மீது கூறி வரும் நிலையில், இப்படி ஒரு பதிவை அவர் போட்டிருக்கிறார்.
என்னை கொன்னுடுவாங்க.. பயத்துடன் பேசிய காஜல் அகர்வால்! எல்லாம் இதை பற்றித்தான்