என்னை கொன்னுடுவாங்க.. பயத்துடன் பேசிய காஜல் அகர்வால்! எல்லாம் இதை பற்றித்தான்
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் ஹீரோயினாக 16 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவர் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.
தெலுங்கில் சத்யபாமா, பகவந்த் கேசரி, பெயரிடப்படாத ஒரு படம் என பிசியாக நடிக்கிறார். அதே நேரத்தில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.

என்னை கொன்னுடுவாங்க..
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் காஜல் அகர்வாலிடம் செய்தியாளர்கள் இந்தியன் 2 படம் பற்றி கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்த அவர் இந்தியன் 2 வித்தியாசமான படம் என்றும் அப்படி ஒரு கேரக்டரில் நான் இதுவரை நடித்ததே இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
இதற்கு மேல் சொன்னால் என்னை படக்குழுவினர் என்னை கொன்றுவிடுவார்கள் எனவும் காமெடியாக காஜல் கூறி இருக்கிறார்.

விஜய் செய்ததை பல வருடங்களுக்கு முன்பே செய்துவிட்ட அஜித்.. வைரலாகும் போட்டோ