கைவிட்ட கணவர்.. கைக்குழந்தையுடன் தனியாக ஷூட்டிங் செல்லும் சன் டிவி நடிகை
நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் ஆகியோரின் திருமணம் மற்றும் அதன் பின் சில மாதங்களிலேயே வந்த சர்ச்சைகள் சின்னத்திரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும்.
செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் தன்னை கணவர் அர்னாவ் உதைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் கூறினார். அதனால் போலீசார் அர்ணாவை கைது செய்து சிறையில் அடைந்தனர். அதன் பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.
சீரியல் டீம் தான் திவ்யாவுக்கு வளைகாப்பு செய்தது. அதன் பின் பிரசவத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது.
கைக்குழந்தையுடன் ஷூட்டிங்
கணவர் கைவிட்ட நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கைக்குழந்தை உடன் தைரியமாக தனியாக ஷூட்டிங் செல்கிறாராம்.
அதை வீடியோ எடுத்து அவரே நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
செவ்வந்தி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை! சின்னத்திரையில் அதிர்ச்சி
You May Like This Video