செவ்வந்தி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை! சின்னத்திரையில் அதிர்ச்சி
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. அந்த தொடரை இயக்கி வருபவர் ஓ.என்.ரத்னம். அவருக்கு பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
அழகு, வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களை அவர் இயக்கி இருக்கிறார். நேற்று பிரியா திடீரென அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்கிற செய்தி சின்னத்திரையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலை
ON ரத்னம் மற்றும் மனைவி இடையே சண்டை நடந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி பிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. போலீசார் இது பற்றி தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த நேரத்தில் குழந்தைகளை பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு அனுப்பி இருந்தார்களாம். குழந்தைகள் மீண்டும் சென்னைக்கு வந்த நிலையில் அவர்களை அழைத்து வர ரத்னம் சென்று இருக்கிறார். அந்த நேரத்தில் தான் மனைவி விபரீத முடிவை எடுத்து இருக்கிறார்.
வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் வாங்க இதுதான் காரணம்