மங்காத்தா படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மங்காத்தா
எல்லா கலைஞர்களுக்குமே அவர்களது திரைப்பயணத்தில் 50வது படம் என்றால் ஸ்பெஷல்.
அப்படி அஜித்தின் 50வது படமாக கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த மங்காத்தா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.
திரைப்பயணத்தில் கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்துவந்த நேரத்தில் மங்காத்தா படம் பெரிய கம்பேக் படம் போல் அமைந்தது.
சம்பளம்
படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மங்காத்தா படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. புதிய பட ரிலீஸ் போல் மங்காத்தா ரீரிலீஸை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள், திரையரங்குகளில் அஜித் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன.
தற்போது மங்காத்தா படத்திற்காக அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri