கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை சுவலட்சுமி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை சுவலட்சுமி
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த சுவலட்சுமி, பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆடும் திறமை கொண்டவர். இந்த நடன நிகழ்ச்சிகள் மூலம் நடிகை சுவலட்சுமியை ஒரு இயக்குனர் 1994ம் ஆண்டு வங்காள திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
முதல் படமே பெரிய அளவில் ரீச் பெற 1995ம் ஆண்டு தமிழில் வெளியான ஆசை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்பட வெற்றி கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், லவ் டுடே என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துவந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரையில் நடித்து வந்தார்.
குடும்பம்
நடிகை சுவலட்சுமி கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சுவலட்சுமி என்ன தான் செய்கிறார் என ஒரு விவரமும் வெளிவரவில்லை.
ஆனால் அவர் தனது கணவருக்கு உதவியாக சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.