குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பாலா வராமல் இருக்க காரணம் இதுதானா? வருத்தத்தில் ரசிகர்கள்
CWC 4
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது துவங்கிவிட்டது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்கிறார்கள்.
புகழ், மணிமேகலை, சுனிதா, குரேஷி என கடந்த சீசன்களில் இருந்த பரிச்சயமான கோமாளிகள் இந்த சீசனிலும் களமிறங்கியுள்ளனர். அதே போல் சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷம் சிவா, ஜி.பி. முத்து என புதிய கோமாளிகளும் அறிமுகமாகியுள்ளார்.
பாலா இல்லை
இந்நிலையில், குக் வித் கோமாளி மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கிய பாலா 4வது சீசனில் இதுவரை வரவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை ஏன் பாலா என்ட்ரி கொடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
காரணம் இதுதானா
அதற்க்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பாலா படங்களில் பிஸியாகிவிட்டார் என்று. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடிப்பதாக பாலா கூறியிருந்தார்.
அதே போல் இன்னும் சில பட வாய்ப்புகளும் பாலாவை தேடி வந்துள்ளதகாவும், அதனால் தான் பாலா இந்த சீசனில் இதுவரை வரவில்லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் வரவிருக்கும் எபிசோட்களில் பாலா வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான வசூலால் பின்தங்கிய வாரிசு.. துணிவு படத்தின் நிலை என்ன தெரியுமா

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
