விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்து வந்த விஜய் தாக்கப்பட்டாரா? கேவலமான செயல், வைரல் வீடியோ
விஜயகாந்த் மரணம்
நேற்று இரவு நடிகர் விஜயகாந்தின் உடலில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் தளபதி விஜய். தன்னை சினிமாவில் தூக்கிவிட்ட விஜயகாந்த் அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் நடிகர் விஜய்யை இப்படி பார்த்ததே இல்லை. அப்படி மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதார். அதன் வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.
குறிப்பாக இறுதி 10 வினாடிகள் விஜயகாந்தை விஜய் பார்த்துவிட்டு வரும் தரும் மனதை உலுக்கியது. அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட விஜய் கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டார்.
கேவலமான செயல்
இதில் எங்கிருந்தோ செருப்பு ஒன்று வந்து விஜய்யை தாக்குவது போல் வீடியோ ஒன்று வைரலானது. மேலும் கூட்டத்தில் உள்ள சிலர் விஜய்யை தாக்கியதாகவும் பேசப்படுகிறது.
ஆனால், இது எதுவுமே உண்மையில்லை. அங்கிருந்த விஜயகாந்தின் தொண்டர்கள் அனைவருமே விஜய்யை தளபதி என்று பாசத்துடன் அழைத்தனர். மேலும் நடிகர் விஜய்யை செருப்பால் தாக்கியது போல் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அது உண்மையான வீடியோ இல்லை.

ஒருவர் தன்னை சினிமாவில் உயர்த்தி விட்டவரின் இறுதி அஞ்சலி வந்து கண்கலங்கி நின்றுள்ளார். அப்போது கூட இப்படி கீழ்தமாகவா நடந்துகொள்வீர்கள். இப்படியொரு எடிட் செய்தது பார்வையாளர்களை பெறவேண்டுமா.
முழுமையாக மனம் உடைந்துபோய் வந்த ஒரு மனிதரை இப்படியா செய்வது. கூட்டத்தில் நடக்காத ஒரு விஷயத்தை நடந்தது போல் சித்தரித்து ஒரு கேவலமான வீடியோவை வெளியிட வேண்டுமா. இதனால் அப்படி என்ன பயனை நீங்கள் அடைய போகிறீர்கள்.
உண்மையான வீடியோவை பாருங்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்..
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri