விஜய்க்கு 200 கோடி சம்பளமா.. உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்
தளபதி 68
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை முடித்த பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று தான் கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கப்போவதாக தெரியவந்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.
விஜய்க்கு 200 கோடி சம்பளமா
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் என்பது போல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபல பத்திரிகையாளர் உண்மையை உடைத்து கூறியுள்ளார்.
அவர் கூறியதன்படி, "தளபதி 68 படத்தில் விஜய்க்கு சம்பளம் ரூ. 125 கோடி மட்டும் தான். ரூ. 200 கோடி எல்லாம் ஒன்றும் இல்லை. அது முற்றிலும் பொய்யான தகவல். ரூ. 125 கோடியுடன் சேர்த்து ரூ. 75 கோடி அதிகமாக விஜய்க்கு சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர் ஒன்றும் முட்டாள் இல்லை" என்பது போல் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
#vijay68
— Valaipechu J Bismi (@jbismi_offl) May 18, 2023
Reliable sources say that the salary of #Vijay for vijay68 is only 125 crores and not 200 crores.
200 crores is entirely a cooked up rumour. @Ags_production is not a fool to give additional 75crores. pic.twitter.com/CJGTgnFNRb
வில்லன் மாமனாரிடம் பொங்கிய ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
