வில்லன் மாமனாரிடம் பொங்கிய ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது பரபரப்புக்கு மேல் பரபரப்பாக பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கண்ணன் - ஐஸ்வர்யா ஆகியோர் செய்யும் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, ஜீவா அவரது மாமனார் வீட்டில் படும் அசிங்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
ஜீவாவிடம் பிஸ்னசை ஒப்படைப்பதாக கூறிவிட்டு அவரை எந்த முடிவும் எடுக்கவிடாமல் அனைத்திலும் மாமனார் மூக்கை நுழைக்கிறார்.
சண்டை போட்ட ஜீவா
இந்நிலையில் தற்போது பேத்தி மகள் கயலை எந்த பள்ளியில் சேர்ப்பது என மீனாவின் தங்கை கணவர் கேட்க அதற்கு திருச்சியில் நல்ல பள்ளிகள் அதிகம் இருக்கிறது, அங்கு சேர்க்கலாம் என கூறுகிறார் மாமனார்.
குழந்தை எப்படி தினமும் சென்றுவிட்டு திரும்பி வருமா என மீனா கேட்க, உன்னையும் ஜீவாவையும் திருச்சியில் செட்டில் செய்துவிட்டா போச்சு என கூறுகிறார். இதை கேட்டு கோபமான ஜீவா அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறார்.
அதன் பின் வந்து தனியாக மாமனாரிடம் சண்டை போடுகிறார் அவர். 'எல்லா முடிவையும் நீங்க ஏன் எடுக்குறீங்க. என் மகளுக்கு என்னை அப்பாவாக இருக்க விடுங்க' என கோபமாக கூறிவிடுகிறார் அவர்.
விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க