கீர்த்தியை கடிக்க வந்த நாய்.. பயந்து ஓடிய வைரல் வீடியோ
கீர்த்தி சுரேஷ்
கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களை கொடுத்த வந்த கீர்த்தி சுரேஷ், தசரா மற்றும் மாமன்னன் படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக சைரன், கண்ணிவெடி, ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரியா அட்லீ மற்றும் இயக்குனர் அட்லீ நெருங்கிய நண்பர்கள் என்பதை நாம் அறிவோம். பிறந்தநாள் விழா அல்லது குடும்பத்தில் நிகழும் நல்ல விஷயங்களில் இவர்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் கண்டிப்பாக வெளிவரும்.
கீர்த்தியை கடிக்க வந்த நாய்
அந்த வகையில் ஜவான் படத்தின் வெற்றி தனது நண்பர்களுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடியுள்ளனர். மேலும் ஜவான் படத்தில் இடம்பெறும் ஹையோடா பாடலுக்கு பிரியா அட்லீ மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடனமாடியுள்ளனர்.

இதன்பின் அங்கிருந்த நாய் குட்டியை கீர்த்தி சுரேஷ் செல்லமாக கொஞ்ச நினைத்து அருகில் செல்ல அந்த நாய் அவரை கடிக்க வந்தது. உடனே அவர் பயந்து ஓடிவிட்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..