25 நாட்களில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர். இவர் ஒரு படம் நடித்தால் அது தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.
அதேபோல் அவரும் மது, சிகரெட் அருந்துவது போன்ற தவறான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தனது பட தேர்வுகளில் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்.
கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது, படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இந்த வருடமும் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.
டான் பட வசூல் விவரம்
லைகா நிறுவனம் முதன்முறையாக சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்து படம் தான் டான். சிபி சக்ரவர்த்தி முதன்முறையாக இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் சில நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வரை வசூத் சாதனை செய்தது.
தற்போது 25 நாளில் இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வந்துள்ளது.
இதோ,
- தமிழ்நாடு- ரூ. 85.70 கோடி
- வெளிநாடு- ரூ. 25 கோடி
- ஆந்திரா- ரூ. 6.70 கோடி
- கர்நாடகா- ரூ. 5.95 கோடி
- கேரளா- ரூ. 1.75 கோடி
- வட மாநிலம்- ரூ. 0.70 கோடி
மொத்தமாக படம் உலகம் முழுவதும் 25 நாட்களில் ரூ. 125.80 கோடி வரை வசூலித்துள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு புதிய லுக்கில் வந்த நடிகர் அஜித்- புகைப்படங்களுடன் இதோ

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
