முக்கிய இடத்தில் KGF 2 படத்தை முந்திய சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் !
வசூல் சாதனை படைத்த டான்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது டான்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இந்த டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இதுவரை வெளியான கோலிவுட் திரைப்படங்களுக்கு இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்து வருவது டான் திரைப்படம் மட்டுமே.
அதுமட்டுமின்றி டான் திரைப்படம் மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் டான் 30.75 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் சென்னையின் வார இறுதி வசூலில் இத்தனை நாட்கள் KGF 2 திரைப்படம் தான் டாப்பாக இருந்து வந்தது. ஆனால் தற்போது டான் திரைப்படம் அதிக வசூல் செய்து No.1 இடத்திற்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- தெறி மாஸ்