உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- ரூ. 100 கோடியை தாண்டியதா?
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் டான். இப்படம் கடந்த மே 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
படத்திற்கான விமர்சனங்கள் எப்படி வந்தது என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. பட வசூலை வைத்தே படத்திற்கு மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.
லைகா நிறுவனம் படத்தை தயாரித்ததில் படு சந்தோஷமாக உள்ளனர். காரணம் படத்திற்கான வசூல் குறைந்த நாட்களிலேயே செம கலெக்ஷன் பெற்றுள்ளது.
தற்போது படம் உலகம் முழுவதும் 12 நாள் முடிவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
இது படக்குழுவினருக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது, சிவகார்த்திகேயன் சினிமா பயணத்திலும் இப்படம் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சரவண விக்ரம் வீட்டில் திருமண விசேஷம்- கண்ணன் செம சூப்பர்