பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சரவண விக்ரம் வீட்டில் திருமண விசேஷம்- கண்ணன் செம சூப்பர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய்யில் படு ஹிட்டாக ஓடும் தொடர். இந்த தொடருக்கு இருக்கும் தனி பெருமையை தமிழிலேயே உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் ரீமேக் ஆகும் ஒரு தொடர்.
இதில் 4 அண்ணன்-தம்பிகளை பற்றியே கதை சுற்றும். அடுத்து என்ன கதைக்களம் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
கண்ணன் வீட்டில் விசேஷம்
தற்போது இந்த சீரியலில் நடிக்கும் கண்ணன் என்கிற சரவண விக்ரம் வீட்டில் நடந்த விசேஷ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவரது தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மிகவும் கோலாகலமாக அவரது தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விசேஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் வேடத்தில் நடிக்கும் சஜிதா கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.