விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தற்போது பாக்ஸ் ஆபீஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
கடைசியாக வெளியான முன்னணி நடிகர்களை விட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தான் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் டான் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ஹிட் ஆகியிருப்பதாக அறிவித்துள்ளனர், டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் அங்கு ஹிட்டாகியுள்ளது.
வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் இதேபோல் பெரிய எதிர்பார்ப்பில் தெலுங்கு மாநிலங்களில் வெளியானது. ஆனால் அப்படங்கள் அங்கு பிளாப் ஆகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்..

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
