தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை நெருங்கும் டான் ! இதுவரை இல்லாத சாதனையை செய்த சிவகார்த்திகேயன்..
டான் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் வெளியாகும் அடுத்தடுத்த திரைப்படம் பெரிய வெற்றியடைந்து வருகிறது.
அதன்படி டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்து அவர் நடிப்பில் வெளியாகியுள்ள டான் படமும் அந்த சாதனையை படைத்திருக்கிறது.
ஆம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள டான் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் 2 வார இறுதியில் டான் படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி டான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.70.85 கோடியை வசூல் செய்துள்ளது.
இதன்முலம் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த சிவகார்த்திகேயன் படமாக டாக்டர் இருந்து வந்த நிலையில் தற்போது டான் திரைப்படம் அதை முந்தியுள்ளது.

வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி போட்ட கமெண்ட்: அனைவருக்கும் ஷாக்