Dont Trouble The Trouble திரை விமர்சனம்

By Tony Oct 02, 2026 10:56 AM GMT
Report

பகத் பாசில் மலையாள சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் ராஜமௌலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் சஷாங் இயக்கத்தில் வெளிவந்துள்ள Dont Trouble The Trouble படம் எப்படி? பார்ப்போம்.

Dont Trouble The Trouble திரை விமர்சனம் | Dont Trouble The Trouble Movie Review

கதைக்களம்

பகத் பாசில் ஒரு ஆம்புலேன்ஸ் ட்ரைவர், பணத்திற்காக பெட்டிங் எல்லாம் கட்டி ஆம்புலேன்ஸ் ஓட்டி தன் வாழ்க்கையை ஓட்டி வருபவர்.

இந்த நிலையில் ஸ்மக்லீங் வேலை பார்க்கும் மகேஷ் மஞ்சரேக்கருடன் இவருக்கு ஒரு மோதல் வந்து ரூ. 25 லட்சம் தர வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது.

அப்போது தான் ஒரு மேஜிக் பொருள் பகத் பாசிலுக்கு கிடைக்க, அதிலிருந்து ஒரு சிறுமி வர, இதை வைத்து எனென்ன பகத் பாசில் செய்தார் என்பதே மீதிக்கதை.

Dont Trouble The Trouble திரை விமர்சனம் | Dont Trouble The Trouble Movie Review

படத்தை பற்றிய அலசல்

பகத் பாசில் முடிந்த அளவிற்கு தன் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார், ஆனால், பகத் இந்த கதாபாத்திரம் சமீப காலமாக பல படங்களில் பார்த்த நியாபகம் வருகிறது, குறிப்பாக வேட்டையன், மாரீசன் ஒரு சில படங்களை நியாபகப்படுத்துகிறது.

பேபி சாரா கியூட் கேர்ள் ஆக வந்து அவரும் தன் பங்கிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார், படம் முழுவதும் இந்த சாரா கியூட் ரியாக்ஸன் பெர்ப்பாமன்ஸ் என பகத்திற்கு ஈடுகட்டி நடித்துள்ளார்.

Dont Trouble The Trouble திரை விமர்சனம் | Dont Trouble The Trouble Movie Review

சிக்மா: திரை விமர்சனம்

சிக்மா: திரை விமர்சனம்

ஆனால், படத்தில் இவர்களை தாண்டி எந்த ஒரு ப்ளஸ்ஸும் இல்லை, காமெடி, எமோஷன், பேண்டசி என பல விஷயங்கள் வந்தாலும் எதுவுமே நம்மை கவரவில்லை என்பது தான் உண்மை.

பகத் கண்டிப்பாக தன்னை சுய பரிசோதனை செய்யும் இடத்தில் உள்ளார், தொடர் சறுக்கலில் இருக்கும் இவர் அடுத்தடுத்தாவது நல்ல படங்களை கொடுத்து கம்பேக் தரவேண்டும்.

Dont Trouble The Trouble திரை விமர்சனம் | Dont Trouble The Trouble Movie Review

முதல் பாதி கூட கான்செப்ட் இண்ட்ரஸ்ட் ஆக உள்ளதே என பார்த்தாலும் இரண்டாம் பாதி ஜவ் ஆக இழுக்கிறது. டெக்னிக்கலாக படத்தின் இசை, ஒளிப்பதிவு எல்லாமே ஆவரேஜ் ஆகவே உள்ளது.

க்ளாப்ஸ்

பகத் பாசில், குட்டி பாப்பா சாரா

கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

பொறுமையை சோதிக்கும் திரைக்கதை

சுவாரஸ்யமில்லாத காட்சிகள்.

மொத்தத்தில் Dont Trouble The Trouble கண்டிப்பாக ஆடியன்ஸுக்கு பெரிய Trouble தான்.

Dont Trouble The Trouble திரை விமர்சனம் | Dont Trouble The Trouble Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US