யாரும் அப்படி பண்ணாதீங்க.. சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பேசும் டிடிஎப் வாசனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
டிடிஎப் வாசன்
வேகமாக பைக் ஓட்டி அடிக்கடி போலீசிடம் மாட்டி சர்ச்சைகளில் சிக்குபவர் டிடிஎப் வாசன். யூட்டுயூபரான அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.
மஞ்சள் வீரன் என்ற அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றியும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
இந்நிலையில் தற்போது டிடிஎப் வாசன் அவரது ரசிகர்கள் உடன் லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார். 'என் படம் ரிலீஸ் ஆனால் யாரும் அதிகம் விலை கொடுத்து பிளாக் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீங்க. டிக்கெட் பணத்தை மட்டும் கொடுத்து பாருங்க' என கூறி இருக்கிறார்.
முதல் படம் நடிக்கும்போதே சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு இவர் பேசுவதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Before Shooting Start Manjal veeran Movie Ticket Huge Demand
— Sam Sharath (@SamSharath4u) August 4, 2023
TTF request for Fans Don't Buy Black Tickets pic.twitter.com/ZeSvPZRzNy