8 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிராகன்
இளம் சென்சேஷனல் ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பி வருகிறது.
கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன், மிஸ்கின் ஆகியோர் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது 8 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 8 நாட்களில் டிராகன் திரைப்படம் உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்! போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வெடித்த வார்த்தை மோதல் News Lankasri
