வசூல் வேட்டையாடும் டிராகன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
டிராகன்
டிராகன் திரைப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 14 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம் வாங்க.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படமா 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில் 14 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் டிராகன் திரைப்படம் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை இப்படம் தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.