ரிலீஸுக்கு முன்பே லாபம்.. வசூல் வேட்டையில் டிராகன்
பிரதீப் ரங்கநாதனின் டிராகன்
திரைப்படம் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே தனது மாபெரும் வெற்றியை பதிவு செய்தார்.
இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்து வரும் பிரதீப் ரங்கநாதன், LIK மற்றும் டிராகன் ஆகிய படங்களை கமிட் செய்தார்.
இதில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் படம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
ரிலீஸுக்கு முன்பே லாபம்
இந்த நிலையில், டிராகன் படம் ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிராகன் படம் தனது ப்ரீ பிசினஸ் மூலம் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளது.
ஓடிடி - ரூ. 14 கோடி, சாட்டிலைட் - ரூ. 6 கோடி, ஆடியோ - ரூ. 6 கோடி பிசினஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்பே லாபம் கிடைத்துள்ளது என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.