USA-வில் தொடங்கிய Dude படத்தின் ப்ரீ புக்கிங்.. எவ்வளவு வசூல் வந்துள்ளது தெரியுமா
Dude
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள Dude திரைப்படம் வருகிற 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் தொடங்கியுள்ளது. அங்கு இப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களில் ஹீரோவாக பட்டையை கிளப்பினார் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து ஹீரோவாக இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதனால் Dude படத்தின் மீது தனி எதிர்பார்ப்பும், இது ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்க, பிரதீப் உடன் இணைந்து மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த ஊரும் Blood பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீ புக்கிங்
வருகிற 17ஆம் தேதி Dude வெளிவரவிருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது. USA-வில் இதுவரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் Dude திரைப்படம் ரூ. 25 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆகும். கண்டிப்பாக முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.