துல்கர் சல்மானிடம் மேடையில் தவறாக நடந்த ரசிகை.. ஷாக் ஆன நடிகர்
துல்கர் சல்மான்
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக மாறி வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.
தற்போது கிங் ஆப் கோதா படத்தின் ரிலீஸுக்காக ப்ரோமோஷன் பணிகளில் துல்கர் சல்மான் பிசியாக இருக்கிறார்.
எல்லைமீறிய ரசிகை
துல்கர் சல்மானின் சமீபத்திய பேட்டியில் அவரது மோசமான ரசிகர் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "ஒரு வயதான பெண், எதற்காக என தெரியவில்லை, அவ்வளவு மோசமாக நடந்துகொண்டார். என் பின்னால், அந்த இடத்தில், கைவைத்து அழுத்தினார், எனக்கு வலி.. மேடையில் பலரும் அங்கு இருந்தார்கள்.'
'ஆண்ட்டி தயவு செஞ்சு அங்க போய் நில்லுங்க' என சொல்ல நினைத்தேன். அந்த அளவுக்கு மோசமாக நடந்துகொண்டார். பலரும் கையை எங்கே வைப்பது என தெரியாமல் பின்னால் வைக்கிறார்கள்.'
'இந்த சம்பவம் நடந்தபோது போட்டோவுக்கு ஸ்மைல் செய்ய கூட முடியாமல் நின்றேன்' என துல்கர் சல்மான் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் 7 தொடங்கும் தேதி இதுதான்.. லேட்டஸ்ட் தகவல்

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
