துல்கர் சல்மான் டிரைவர் திடீர் மரணம்! சென்னை வீட்டில் அதிர்ச்சி சம்பவம்
துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்து தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருந்து வருகிறார். அவர் நடித்த சீதா ராமம் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய ஹிட் ஆனது.
துல்கர் சல்மான் தற்போது சென்னையில் க்ரீன்வேஸ் சாலையில் இருக்கும் சொந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.

டிரைவர் மரணம்
துல்கர் சல்மான் வீட்டில் டிரைவராக பணியாற்றிய நபர் தற்போது திடீரென மரணமடைந்து இருக்கிறார் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
துல்கர் வீட்டில் அந்த டிரைவர் அவரது அறையில் பீசா மற்றும் கூல் டிரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கிறார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாப்பிடும்போது அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பா.. எழுந்து நின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri