சினிமாவின் உண்மையான கிங் ரஜினி தான்.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசினாரா வாரிசு நடிகர்
ஜெயிலர்
ரஜினியின் ஜெயிலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. உலகளவில் ரூ. 500 கோடியை இப்படத்தின் வசூல் நெருங்கியுள்ளது.
இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன்மூலம் ரஜினிகாந்த் மீண்டும் தான் வசூல் மன்னன் என நிரூபித்துள்ளார் என கூறி வருகின்றனர்.
நடிகர் துல்கர் சல்மான், நேற்று தன்னுடைய கிங் ஆஃப் கொத்தா படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜெயிலர் படம் குறித்து பேசினார்.
துல்கர் சல்மான் ஸ்பீச்
இதில் 'நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையான கிங் யார் என்று நிரூபித்துள்ளார். அவருடைய ஜெயிலர் படம் பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். அதில் 1% சதவீதம் மக்கள் என்னுடைய கிங் ஆஃப் கொத்தா படத்திற்கு வந்தாலே அதுவே பெரிய சாதனை' என பேசியுள்ளார் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், இவர் விஜய்யை தாக்கி தான் இப்படி பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்த விஷயமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடுவது, மன வருத்தத்தை தருகிறது.. மாமன்னன் குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
