நடிகர் துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்விராஜ் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. இதுதான் காரணமா?
துல்கர் சல்மான்
மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் துல்கர் சல்மான்.
இவர் தமிழில் வெளிவந்த வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ காதல் கண்மணி, ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளிவந்த லோகா ரூ. 300+ கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ED சோதனை
சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறதாம்.
சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகர் துல்கர் சல்மானின் கேரள வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை நடந்திருந்த நிலையில், தற்போது சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.