ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- அவருக்கு பதில் யார்?
ஈரமான ரோஜாவே 2
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டான முதல் பாகத்தை தொடர்ந்து 2வது பாகமாக புதிய கதைக்களத்தில் அதே பெயரில் வந்த தொடர் தான் ஈரமான ரோஜாவே 2.
பார்த்திபன்-காவ்யா, ஜீவா-ப்ரியா என இந்த இரண்டு ஜோடிகளை வைத்தே கதை நகர்ந்து வருகிறது. இவர்களது வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் ஓய்ந்து இப்போது அடுத்த கல்யாணத்தின் மூலம் பிரச்சனை தொடங்கியுள்ளது.
முக்கிய பிரபலம் விலகல்
ஈரமான ரோஜாவே 2 தொடரை தாய் செல்வம் அவர்கள் இயக்கி வந்தார், ஆனால் அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இப்போது கதையை சுந்தரம் அவர்கள் தான் இயக்கி வருகிறார், தற்போது அவரும் தொடரில் இருந்து விலகிவிட்டாராம்.
அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார், அக்டோபர் 2ற்கு மேல் புதிய இயக்குனர் இயக்கத்தில் தான் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஆனால் யார் அந்த இயக்குனர் புதிய நேரம் என்ன என்பதெல்லாம் விரைவில் தெரியவரும்.