ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் சித்தார்த் திருமணத்தில் கலந்துகொண்ட கேப்ரியல்லா- இதோ புகைப்படம்
ஈரமான ரோஜாவே 2
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஹிட்டடித்துவிட்டது என்றால் உடனே அதே பெயரில் வேறொரு கதைக்களத்தில் புதிய சீரியல் தொடங்கிவிடும். அப்படி தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ஈரமான ரோஜாவே 2.
திரவியம் மற்றும் பவித்ரா முதல் பாகத்தில் நடித்து ஹிட்டடிக்க இப்போது 2ம் பாகத்தில் புதிய நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வருகிறது.
சண்டை, சண்டை என கடந்த சில வாரங்களாக தொடரில் சோகமான கதைக்களமே ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த டிராக்கை மாற்றுங்கள் என ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள்.

சித்தார்த் மனைவி
இந்த தொடரில் பார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெயர் சித்தார்த். இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அதிகம் பதிவிடுவார்.
தற்போது நடிகர் சித்தார்த் திருமண வரவேற்பின் போது நடன இயக்குனர் சாண்டி மற்றும் இப்போது காவ்யாவாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா வந்துள்ளார்கள்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக இருவரும் எப்படி இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிரபலத்தின் குழந்தைகளுடன் விளையாடும் நடிகை சமந்தா- கியூட் வீடியோ
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan